Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
மதுரையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடுக் கூட்டம் நடை பெற்றது.
ஏஐடியூசி டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.பெரி யசாமி, சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரா.லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொமுச டாஸ்மாக் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் எம்.சிவபிரகாசம், தொமுச மாநிலச் செயலாளர் வி.அல்போன்ஸ், சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரா.தெய்வராஜ், எல்எல்எப் மாநில பொதுச்செயலாளர் இ.முத்துப் பாண்டி, டிஜிடிஇயூ டாஸ்மாக் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.வி.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.
இம்மாநாட்டில், டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பணியாளர்களுக்குத் தீபாவளி போனஸாக 30 சதவீதம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத்தொகுப்புகளாகத் திருத்தி மாற்றியமைப்பதை கைவிட வேண்டும்.
கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும் பத்தில் ஒருவருக்கு வேலை வழ ங்க வேண்டும்.
கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியா ளர்களை ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சிவக்குமார் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT