Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM
தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் நேற்று சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத ரூ.64,800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4-வது தெருவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி பாதுகாப்பு தொடர்பாக சான்றிதழ் அளிப்பது இந்த அலுவலகத்தின் பணி ஆகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைநடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணைஇயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மேக்லின் எஸ்கால்தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, அலுவலகத்தில்இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.64,800 பணம், 54 ஸ்வீட் பாக்ஸ்,10 பட்டாசு பாக்ஸ், 10 மெழுகுவத்தி பாக்ஸ் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT