Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

தொடர் மழையால் பட்டாசு ஆலைகள் மூடல்

தொடர் மழை காரணமாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே தேங்கிய மழை நீர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் பட்டாசு ஆலைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னரும் நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரையும் தொடர்ந்து மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி (மி.மீ.ல்) அருப்புக்கோட்டை-31, சாத்தூர்-25, வில்லிபுத்தூர்-3, சிவகாசி-4, விருதுநகர்-32, காரியாபட்டி-36, வெம்பக்கோட்டை-6. அதிக பட்ச மாக கோவிலாங்குளத்தில் 38 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

தொடர் மழையால் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும்் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று மூடப்பட்டன. சிவகாசி மற்றும் அதைச் சுற்றி திறக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் கூறியதாவது:

குறிப்பிட்ட அளவு வெயில் மற்றும் வெப்ப நிலை இருந்தால் மட்டுமே பட்டாசுக்கான மருந்துக் கலவையை மேற்கொள்ள வேண் டும். இல்லையெனில் மருந்துக் கலவை செய்ய முடியாது. தொடர்ந்து இதுபோன்ற நிலை நீடித்தால் பட்டாசு உற்பத்தி மட்டுமின்றி விற்பனையும் கடுமை யாகப் பாதிக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x