Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு நவ.9-ல் விசாரணைக்கு வருகிறது.
நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த வி.பிரீத்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நான் பாளை. அரசு உதவி பெறும் சாராள் தக்கர் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 500-க்கு 491 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மாண வியாகத் தேர்வானேன்.
பிளஸ் 2-வில் 600-க்கு 482 மதிப் பெண் பெற்றேன். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 720-க்கு 245 மதிப்பெண் பெற்றேன். எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
தமிழகத்தில் 2017-2018 கல்வி யாண்டில் நீட் தேர்வு அடிப் படையில் நடந்த மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் போதுமான அளவில் சீட் கிடைக்காததால் இது தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி கலையரசன் குழுவை அரசு அமைத்தது.
நீதிபதி குழு ஆய்வு செய்து மருத்துவச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. பின்னர் அரசாணையும் பிறப்பித்தது. இந்த அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கப் படவில்லை.
அரசுப் பள்ளிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கும் அதிக வேறுபாடு கிடையாது. அரசு வழங்கும் நிதி யில்தான் அரசு உதவிபெறும் பள் ளிகள் நடக்கின்றன.
எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் வழக்கறிஞர் பினேகாஸ் காணொலி மூலம் ஆஜராகி வேண்டுகோள் விடுத்தார். மனுவை நவம்பர் 9-ல் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT