Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
முறைகேடு எதுவும் நடைபெறா ததால் மதுரையில் கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட குவாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் பி.ஆர்.ராஜசேகரன் வலியுறுத் தினார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:
மதுரை மாவட்டத்தில் கிரா னைட் குவாரிகளில் விதிமீறல் நடப்பதாகக் கூறி, 175 குவாரிகளில் 84 குவாரி உரிமையாளர்கள் மீது கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு முடியும் வரை மீதம் உள்ள 91 குவாரிகள் செயல்படக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும், உரி மம் பெற்ற 91 குவாரிகளும் தொடர்ந்து 2 ஆண்டுகள் ஏன் செயல்படவில்லை என விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மாவட்ட நிர்வாகம் தடையால் நடத்த முடியவில்லை என விளக்கம் அளித்தும் ஏற்காமல் 91 குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. எங்களுக்கு எதிரான வழக்கு களில் 8 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மதுரை மாவட் டத்தில் இத்தொழிலை நம்பி சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், கிரானைட் தொழில் சார்ந்த பிற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
1997 முதல் 2013 வரை 17 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கிரானைட் ஏற்றுமதி ரூ.52.374 கோடி. இதில் தமிழ கத்தின் பங்கு 13 சதவீதம். உற்பத்தியில் மதுரையின் பங்கு 41.10 சதவீதம். இதன் மூலம் மதுரையில் இருந்து ரூ.2.798 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. எந்த முறை கேடும் நடக்கவில்லை.
மதுரை மாவட்டத்தில் 2011-12-ல் கனிம உரிமத் தொகை யாக அரசுக்கு ரூ.26 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கிரானைட் குவாரிகளுக்கு தடையால் 8 ஆண்டுகளில் உரிமத் தொகை மூலம் அரசுக்கு ரூ.212 கோடியும், அந்நியச் செலாவணியாக சுமார் 3 ஆயிரம் கோடியும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் நிபுணர் குழு மூலம் மதுரை கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து முடிவெடுக்க 2015-ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி யது. இதுவரை குழு ஆய்வு செய்யவில்லை. நீதிமன்ற வழி காட்டுதல்படி சிறப்புக் குழு குவாரி உரிமையாளர்கள் முன்னிலையில் ஆய்வு செய்ய வேண்டும். விதி மீறல் இருந்தால் நடவடிக்கை, அபராதம் விதிக்கலாம். ஆதாரமற்ற புள்ளி விவரங்களைக் காட்டி, இத் தொழில் முடக்கப்பட்டுள்ளது.
மதுரை தவிர பிற மாவட்டங்களில் குவாரிகள் செயல்படுகின்றன. மதுரையில் குவாரிகள் மீண்டும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது துணைத் தலை வர்கள் பிகே.செல்வராஜ், ஆறுமு கம், பொருளாளர் தெய்வேந்திரன், ஆலோசகர் பிகேஎம். செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT