Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
புளியங்குடியில் குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கக் கோரி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், நேற்று சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் செய்யது அலி பாதுஷா தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் காஜா மைதீன், நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர்கள் மைதீன், சதாம் ஹுசைன், மாவட்ட விவசாய அணி செயலாளர் முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் பசிர் ஒலி, மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில விளையாட்டு அணி செயலாளர் மைதீன் பாதுஷா, மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது அலி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆர்எஸ்கேபி சாலை, கற்பக வீதி, ஆசாரி தெரு, கேடிஎம் தெரு போன்ற பகுதிகளில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளை விரைவில் சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT