Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
திருப்பரங்குன்றம் கோயில் யானையைப் பராமரித்ததற்காக ரூ.3 லட்சம் கட்டணம் செலுத் துமாறு வனத்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர், உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் கோயி லுக்குச் சொந்தமான யானை தெய்வானை தாக்கியதில் பாகன் காளிதாசன் கடந்த மே 24-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து யானை தெய்வானை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் திருச்சி யானைகள் காப் பகத்துக்கு கடந்த ஜூன் 1-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அக். 6-ம் தேதி தெய்வானை பொள்ளாச்சி ஆனைமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 1 முதல் ஆக.31 வரை தெய்வானையை பராமரித்ததற்காக ரூ.3,04,032 கட்டணம் செலுத்துமாறு திருச்சி மாவட்ட வனப் பாதுகாவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கால் நடை மருத்துவரின் அறிவுரை யின் பேரில்தான் தெய்வானை திருச்சி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, கட்டணம் செலுத்தக்கோரி வனத்துறை அனுப்பிய நோட் டீஸை ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி அப் துல் குத்தூஸ் விசாரித்து, திருச்சி மாவட்ட வனப் பாதுகாவலர் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழக முதன்மை வனப் பாது காவலர், திருச்சி மாவட்ட வனப் பாதுகாவலர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசார ணையை டிச.2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT