Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
மின்சாரம் தாக்கி மகன் இறந்த நிலையில் இழப்பீடு கோரி தந்தை அனுப்பிய கடிதத்தையே வழக்காக விசாரித்த உயர் நீதிமன்றம், ரூ.13.86 லட்சம் இழப்பீடும், இறந்தவரின் சகோதரருக்கு வேலையும் வழங்க உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஜி.செந்தட்டிகாளைபாண்டியன். தோட்டத் தொழிலாளி. இவரது மகன் சரவணன் (22), சென்னை பல்கலை.யில் எம்ஏ படித்து வந்தார். கரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அக். 7-ல் பைக்கில் சென்ற இவர், தந்தையை சந்தையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மரத்தில் அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சரவணன் உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது மகன் மரணத்துக்கு இழப்பீடு கேட்டு செந்தட்டிக்காளைபாண்டியன், உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை ரிட் மனுவாக மாற்றி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மன்னன் மனுநீதிச் சோழன், கன்றுக்குட்டியை தேர் ஏற்றி கொலை செய்த தனது சொந்த மகனை, அதே தேரை ஏற்றிக் கொன்றது வரலாறு. மனுநீதிச் சோழன் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். அதனால், அதுபோல் தண்டனை வழங்க மன் னர்கள் இல்லை. அதேநேரத்தில் தவறுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் நீதிக்காக அழுது கொண்டி ருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நீதி வழங்குவது நீதிமன்றத்தின் கடமை.
இந்த வழக்கில் மனுதாரர், பதிவாளருக்குக் கடிதம் அனுப் பியுள்ளார். அவரை சிவில் நீதி மன்றம் செல்லுமாறும், ரிட் மனுத் தாக்கல் செய்யுமாறும் சொல்ல மனது வரவில்லை. மறைந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், கடிதத்தையே ரிட் மனுவாக விசாரித்து நீதி வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரரின் கடிதத்தை ரிட் மனுவாக மாற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ப்பட்டது.
மனுதாரரின் மகன் இறப்புக்கு மின்வாரியம் பொறுப்பேற்க வேண்டும். சரவணன் 22 வய தில் இறந்துள்ளார். ஐ.ஏ.எஸ் ஆகும் கனவில் இருந்துள்ளார். எனவே, மனுதாரர் குடும்பத்துக்கு மின்வாரியம் ரூ.13 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண் டும்.
இதில் ரூ.5 லட்சம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.8.86 லட்சத்தை 12 வாரத்தில் மின்வாரியம் வழங்க வேண்டும். மனுதாரரின் மற்றொரு மகன் பாரதிக்கு மின் வாரியத்தில் இளநி லை உதவியாளர் பணி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப் பில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT