Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM

சிலைகள், நகைகள் பாதுகாப்பு தொடர்பாக சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் ஆய்வு

வாடகை செலுத்த தவறிய சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 4 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலத்தில் உள்ள கோயில்களின் நகைகள், சுவாமி சிலைகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்புப் பிரிவு எஸ்பி தலைமையில் ஆய்வு தொடங்கியது.

சேலத்தில் சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், அழகிரிநாதர் கோயில் உள்ளிட்ட பழமையான பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன.

இக்கோயில்களில் சுவாமி சிலைகள் மற்றும் நகைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக, ஆண்டுதோறும் காவல்துறை அதிகாரிகளால் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு பிரிவு எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது.

இதில், அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) சுரேஷ், மாநகர காவல்துறை உதவி ஆணையர்கள் பாலசு ப்பிரமணியம், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், நகைகள், சிலைகள் பாதுகாப்பு அறை, விழாக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், இரவு காவல் பணி உள்ளிட்டவை குறித்து ஆலோwசனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று (3-ம் தேதி) கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை அழகிரி நாதர் கோயில்களில் ஆய்வு நடக்கவுள்ளது.

இதற்கிடையில், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 4 கடைகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 8 ஆண்டுகளாக கடைக்கான வாடகையை தராமல் உள்ளனர். வாடகை நிலுவைத் தொகை ரூ.10 லட்சத்தை செலுத்தக் கோரி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கடைக்காரர்கள் வாடகையை செலுத்தாமல் இருந்தனர். இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் புனிதராஜ் தலைமையில் கோயில் ஊழியர்கள், வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x