Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
சிதம்பரம் அரசு மருத்துவ மனையில், இளம்பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 8 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைக்கப்பட்டது.
சிதம்பரத்தை சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அவருக்கு கர்ப்பப்பைக்கு அருகில் உள்ள வலது சினைப்பையில் பெரிய நீர்க்கட்டிஇருப்பது மருத்துவ பரிசோத னையில் கண்டறியப்பட்டது. இவர் கடந்த 25-ம் தேதி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். பரிசோதனைகளில் 36 வாரங்கள் கடந்த சிசு இருக்கும் அளவில் வயிற்றில் உள்ள கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
கட்டியின் நீள அகலம் 30 செ.மீ x 30 செ.மீட்டரும், அதனுள் 8 லிட்டர் சினைப்பை சுரபி நீர் இருப்பதும் மீயொலி (USG Scan) மூலம் தெரியவந்தது. அப்பெண் வலியில் துடித்ததாலும், சினைப்பை கட்டி உடையும் நிலையில் இருந்ததாலும், மயக்கமருந்து மருத்துவர் மற்றும் விடுப்பிலிருக்கும் சக மருத்து வர்களிடமும் கலந்தாலோசித்து உடனே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மயக்க மருந்து நிபுணர் நீதிமாணிக்கம், மூத்த மகப்பேறு மற்றும் பெண் பிணியியல் மருத்துவர் நந்தினி, பணி மகப்பேறு மருத்துவர் ராகுல் ஆனந்த் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக அறுவை அரங்க செவிலியர் மகாலட்சுமி, உதவியாளர்கள் சௌந்தர்ராஜன் மற்றும் ஷாநவாஸ் ஆகியோர் செயல்பட்டனர்.
அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையில் இருந்த சுமார் 8 கிலோ கட்டி அகற்றப்பட்டது. அந்தப் பெண், மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT