Published : 05 Dec 2020 03:15 AM
Last Updated : 05 Dec 2020 03:15 AM

முல்லை பெரியாறு லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் வழங்க ரூ.1,295 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்2023-க்குள் முடிக்கப்படும் என உறுதி

மதுரையில் நேற்று நடந்த விழாவில் ரூ.1,295 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர்.படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை மாநகராட்சி மக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூ.1,295 கோடி மதிப்பீட்டிலான முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திட்டப் பணிகள் 2023-க்குள் முடிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கு வதற்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.1,295 கோடி மதிப்பீட்டிலான முல்லை பெரி யாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அத்துடன் ரூ.31 கோடி யில் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட பல் வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

விழாவில் முதல்வர் பேசிய தாவது:

முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் உறுதியாக மதுரை மாநகருக்கு நிறைவேற்றப்படும் என அறிவித்து இருந்தேன். அதன் படி, தற்போது இந்த திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளேன்.

இந்த திட்டத்தால் மதுரை மக் களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இது வர லாற்றுச் சிறப்புமிக்க திட்டம். அதிமுக அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை உடனுக் குடன் செயல்படுத்தி மக்கள் மனதில் நிற்கும்வகையில் நிறை வேற்றி வருகிறது.

வரலாறு படைத்த அரசு

தமிழகம் முழுவதும் ஒன்றல்ல, இரண்டல்ல 76 குடிநீர் திட்டங் களின் பணிகள் நடந்து கொண்டிருக் கின்றன. 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் மக்களுக்கு 4,900 எம்எல்டி குடிநீர் வழங் கப்பட்டது. அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது 7,600 எம்எல்டி குடிநீர் வழங்கி கொண்டிருக்கிறோம். இந்திய துணைக் கண்டத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் கூடுதல் குடிநீர் கொடுத்த வரலாறு கிடையாது. அந்த வரலாற்றை படைத்தது அதிமுக அரசுதான்.

புதிய 76 குடிநீர் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றும்போது தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை இல்லை என்ற நிலை ஏற்படும். நகர்புறங்கள் மட்டுமில்லாது கிரா மங்களுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 40 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப் பட்டுள்ளன. இதுவரை 7.5 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. குடிநீருக்காக மக்கள் போராடும் நிலை மாறி, அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நிலையான, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.

1.10 லட்சம் இணைப்புகள்

முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் 2023-ம் ஆண்டுக் குள் நிறைவேற்றப்படும். இந்தத் திட்டத்தின் வாயிலாக மதுரையில் புதிதாக 1.10 லட்சம் குடிநீர் இணைப் புகள் வழங்கப்பட உள்ளன. ஏற் கெனவே பல்வேறு திட்டங்கள் மூலம் மதுரை மக்களுக்கு போது மான குடிநீர் வழங்கப்படுகிறது. அந்தக் குடிநீர் போதாது என கூறியதால் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற் றப்படுகிறது. எதிர்கால சந்ததி யினருக்கு குடிநீர் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற சீர்மிகு நகரத் திட்டம் மூலம், ரூ.974.86 கோடியில் மதுரை நகருக்கு தேவையான பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. இதுபோல், பறக்கும் பாலம், உயர் மட்ட மேம்பாலம் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடக்கின்றன.

மதுரை விமான நிலைய விரி வாக்கப் பணியில் சாலை குறுக்காக வருவதால் அதற்கு கீழ் பாலம் அமைக்க வேண்டும் என உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். அதனால், விமான நிலையம் அருகே உள்ள சுற்றுச்சாலையில் (ரிங் ரோடு) விமான ஓடுதளத்துக்கு கீழாக சாலை செல்லும்படி கீழ்பாலம் அமைக்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு மானப் பணி விரைவில் தொடங் கப்படும்.

எவ்வளவோ திட்டங்கள் செயல் படுத்தப்பட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதுவும் நடக்கவில்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று சொல்கிறார். அவர் பார்க்கிற பார்வையில் கோளாறா, மனதில் கோளாறா என்பது தெரியவில்லை.

ஸ்டாலின் வெளியே வந்து பார்த்தால்தானே நடக்கின்ற அரசு திட்டங்கள், நல்ல விஷயங்கள் தெரி யும். அவர், பூட்டிய அறையில் காணொலியில் பேசிக் கொண்டிருக் கிறார். அறையில் இருந்து முதலில் நீங்கள் வெளியே வந்து பாருங்கள். அரசு எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தற்போது நிறைவேற்றப்படும் திட்டங்கள் ஒரு சான்று.

தேர்தலை மனதில்கொண்டு தேவையில்லாமல் அதிமுக அரசை நாள் தோறும் அவர் வசைபாடுகிறார். எங்கள் மீது பழி சொல்வதுதான் அவர்களது வாடிக்கை. மக்களுக்கு நல்லது செய்வதை பாராட்டும் மனம் ஸ்டாலினுக்கு கிடையாது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x