Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வார்டுவாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநிலதேர்தல் ஆணையம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:
வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்திய தேர்தல் ஆணையம்,கடந்த நவ.1-ம் தேதி சட்டப்பேரவை தொகுதி அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுவாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்பட்டியல் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் நேற்று (டிச.9) வெளியிடப்பட்டது.இந்த வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வார்டுவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் பெயர், எந்த வார்டில், எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அட்டை எண்ணைஉள்ளீடு செய்தும் இவ்விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.
பெயர் விடுபட்டவர்கள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு தொடர்புடைய சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்றுஅவர்கள் விண்ணப்பிக்க வேண் டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT