Published : 31 May 2023 02:32 PM
Last Updated : 31 May 2023 02:32 PM

Street View | இந்தியா முழுவதும் கூகுள் அறிமுகம் செய்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

கோப்புப்படம்

சென்னை: கூகுள் ஸ்ட்ரீட் வியூ, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் என பல இடங்களின் 360 டிகிரி கோண வியூவை வழங்கி வருகிறது. தற்போது இந்த அம்சம் இப்போது இந்தியாவில் பல இடங்களில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.

இந்த அம்சத்தை கூகுள் நிறுவனம் 2016-ல் அறிமுகம் செய்தது. இருந்தாலும் இந்தியாவில் இந்த அம்சம் கூகுள் மேப்ஸில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் பெரும்பாலான லொகேஷனை ஸ்ட்ரீட் வியூ அம்சத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி மற்றும் வெப் வெர்ஷனில் இதை பயன்படுத்தலாம். இந்த அம்சத்தின் மூலம் பொது இடங்களை மட்டும்தான் பார்க்க முடியும்.

இப்போதைக்கு இந்த அம்சத்தின் மூலம் ஒரு இடத்தின் 360 டிகிரி வியூவை மட்டுமே பார்க்க முடியும். இதன் மூலம் கூகுள் மேப்ஸில் ரியல் டைம் வழிகாட்டி (டேடெக்‌ஷன்ஸ்) உதவியை பெற முடியாது. இந்த அம்சத்தை தற்போது கூகுள் சோதித்து பார்த்து வருகிறது. இது இமர்சிவ் (Immersive) வியூ என அறியப்படுகிறது.

பயன்படுத்துவது எப்படி?

  • கூகுள் மேப்ஸை ஓபன் செய்ய வேண்டும்
  • அதில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்
  • தொடர்ந்து கூகுள் மேப்ஸில் உள்ள லேயர் அம்சத்தின் மூலம் ஸ்ட்ரீட் வியூ மோடுக்கு மாற்ற வேண்டும்
  • அந்த இடத்தில் உள்ள தெருக்கள் நீல நிறத்தில் கோடு போட்டது போல காட்டப்படும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் அந்த தெருவின் 360 டிகிரி ஸ்ட்ரீட் வியூவை பெறலாம். முன் செல்வது, பின்புறம் வருவது, பக்கவாட்டிலும் அந்த இடத்தை மேப் கொண்டு பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x