Published : 23 Feb 2023 06:01 PM
Last Updated : 23 Feb 2023 06:01 PM

அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யலாம்: வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்

பிரதிநிதித்துவப் படம்

கலிபோர்னியா: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் பயனர்கள் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் புதிய அம்சம் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த அம்சம் பீட்டா அளவிலான சோதனையில் இருப்பதாக தகவல்.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் விரைவில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் அம்சம் இந்த தளத்தில் அறிமுகமாக உள்ளது. இதனை வாட்ஸ்அப் குறித்த மேம்பாடுகளை பின்தொடர்ந்து வரும் Wabetainfo தெரிவித்துள்ளது.

பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகும் என்றும். அது சார்ந்து டெவலப்பர்கள் பணியாற்றி வருவதாகவும் தகவல். இதன் மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யவும், அதில் கூடுதல் தகவல்களை பயனர்கள் சேர்க்கலாம் என்றும் தெரிகிறது. இது முதலில் ஐஓஎஸ் இயங்குதள போன்களை கொண்ட பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. பின்னர் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x