Published : 21 Feb 2023 05:56 PM
Last Updated : 21 Feb 2023 05:56 PM
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 28-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது. பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது போக்கோ. அந்த வகையில் இப்போது C55 போனை போக்கோ அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
> 6.71 இன்ச் திரை அளவு கொண்ட எல்சிடி டிஸ்பிளே
> மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
> ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
> 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
> 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
> பின்பக்கத்தில் இரண்டு கேமரா. 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
> 5,000mAh பேட்டரி
> 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
> மைக்ரோ யூஎஸ்பி போர்ட்
> பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
> நீலம், கருப்பு மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
> இதன் விலை ரூ.9,499 மற்றும் ரூ.10,999. இருப்பினும் விலையில் அறிமுகம் சலுகை இருக்கும் என தெரிகிறது
Too cool to handle! #POCOC55 comes with the Helio G85 processor, the biggest display and one of the best camera in the segment, your experience with #POCOC55 is nothing short of perfection.
— POCO India (@IndiaPOCO) February 21, 2023
Introductory price: ₹8,499*
Save the date: Sale on 28th Feb on @Flipkart.#SwagAndSpeed pic.twitter.com/kWIVQPytEC
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT