Published : 06 Feb 2023 06:48 PM
Last Updated : 06 Feb 2023 06:48 PM
சென்னை: பான் மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் என இந்திய அரசு கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இதற்கான கெடு தேதி கடந்த மார்ச் 31, 2022 எனச் சொல்லப்பட்டது. இருந்தபோதும் இணைக்கத் தவறிய பயனர்கள் குறைந்தபட்ச அபராதத் தொகையுடன் வரும் மார்ச் 31 வரை இதை மேற்கொள்ளும் வகையில் அரசு நீட்டித்தது. இந்தச் சூழலில் பயனர்கள் தங்களது பான் - ஆதார் இணைப்பின் நிலையை எப்படி சரிபார்ப்பது என்பதை பார்ப்போம்.
பான் - ஆதார் இணைப்புக்கான அபராதத் தொகை ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையில் ரூ.500 என இருந்தது. கடந்த ஜூலை 1, 2022 முதல் வரும் மார்ச் 31, 2023 வரையில் அபராதத் தொகை ரூ.1,000 என உள்ளது. கடந்த மார்ச் 31-க்கு முன் இணைக்க தவறிய பயனர்கள் இந்த அபராதத் தொகையை செலுத்தி பான் - ஆதாரை இணைக்க முடியும். இதன் இணைப்பின் நிலையை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் சரி பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் சரிபார்ப்பது எப்படி?
ஆப்லைனில் சரிபார்ப்பது எப்படி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT