Published : 27 Jan 2023 06:57 PM
Last Updated : 27 Jan 2023 06:57 PM
புனே: Indus Battle Royale எனும் புதிய ஆக்ஷன் கேம் இந்தியாவில் முன்பதிவுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பப்ஜி கேமுக்கு மாற்று என சொல்லப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த சூப்பர் கேமிங் எனும் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த புதிய கேமின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
கடந்த 2020 வாக்கில் இந்தியாவில் பப்ஜி உட்பட பல்வேறு சீன செயலிகள் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 2021-ல் 'இந்திய பப்ஜி' என சொல்லப்படும் Battlegrounds Mobile India கேம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தென்கொரிய நிறுவனமான கிராஃப்டன் வடிவமைத்தது. இருந்தும் கடந்த 2022, ஜூலையில் இந்திய பயனர்களால் இந்த கேமை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அக்சஸ் செய்ய முடியாத வகையில் முடக்கப்பட்டது. பப்ஜி முடக்கப்பட்ட அதே தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் இந்த கேமையும் இந்திய அரசு முடக்கியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், சந்தையில் உள்ள வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சூப்பர் கேமிங் தரப்பில் Indus Battle Royale கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அது முன்பதிவுக்கும் வந்துள்ளது. இருந்தாலும் இந்த கேம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. அதே நேரத்தில் இதை இலவசமாக டவுன்லோட் செய்து கொண்டு பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிகிறது.
பப்ஜி, ப்ரீ ஃபயர், பிஜிஎம்ஐ கேம்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாகவே இந்த புதிய கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது. மொத்தம் 1.21 நிமிடங்கள் ஓடும் இந்த கேமின் ட்ரெய்லரில் பிளேயர்கள் தேர்வு செய்து கொள்ளும் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் தெறிக்க இந்த ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சூப்பர் கேமிங் ஏற்கெனவே பல்வேறு கேம்களை வடிவமைத்துள்ளது. ‘மாஸ்க் கன்’ கேமை இந்நிறுவனம்தான் வடிவமைத்தது. பிளே ஸ்டோரில் மட்டுமே சுமார் 1 லட்சம் டவுன்லோடை இந்த கேம் கடந்துள்ளது. கணினியிலும் பயன்படுத்தும் வகையில் Indus Battle Royale அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ட்ரெய்லர் லிங்க்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT