Published : 30 Dec 2022 05:52 PM
Last Updated : 30 Dec 2022 05:52 PM

iQOO Neo 7 ரேஸிங் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

iQOO Neo 7 ரேஸிங் எடிஷன் ஸ்மார்ட்போன்

சென்னை: iQOO Neo 7 ரேஸிங் எடிஷன் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று தான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இதன் நியோ 7 சீரிஸ் போன் வரிசையில் இப்போது iQOO Neo 7 ரேஸிங் எடிஷன் அறிமுகமாகி உள்ளது. கடந்த அக்டோபரில் iQOO Neo 7 அறிமுகமானது. தொடர்ந்து iQOO Neo 7 SE அறிமுகம் செய்யப்பட்டது.

முந்தைய மாடல்களை காட்டிலும் சக்தி வாய்ந்த ப்ராசஸரை கொண்டுள்ளது இந்த போன். இந்த போன் இப்போதைக்கு சீன தேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • 6.78 இன்ச் AMOLED ஸ்க்ரீன் ஃபுள் ஹெச்.டி டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரேஷன் சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என நான்கு வேரியண்ட்டுகளில் அறிமுகமாகி உள்ளது
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 5,000mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் கொண்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x