Published : 26 Dec 2022 04:42 PM Last Updated : 26 Dec 2022 04:42 PM
ப்ரீமியம் Rewind 2022: ஸ்டார்ட்-அப், யுனிகார்ன் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-வது இடம்
புதுடெல்லி: ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை (77,000) மற்றும் யுனிகார்ன்களின் எண்ணிக்கையில் (107) இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் இந்த ஆண்டுக்கான செயல்பாடுகளின் முக்கிய அம்சங்கள்:
எஸ்சிஐ (அறிவியல் ஆராய்ச்சி இதழ்கள்) இதழ்களில் வெளியீடுகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. 2013 இல் 6-வது இடத்தில் இருந்து இப்போது உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது
அறிவியல் மற்றும் பொறியியலில் வழங்கப்பட்ட பிஎச்டி பட்டங்களின் எண்ணிக்கையில் (கிட்டத்தட்ட 25,000) அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
2022-ல் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை (77,000) மற்றும் யுனிகார்ன்களின் எண்ணிக்கையில் (107) இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளது.
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் தரவரிசையில் இந்தியா 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2022 இல் 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் இந்தியா 2-வது இடத்திலும் மத்திய மற்றும் தெற்கு ஆசிய பொருளாதாரங்களில் குறியீட்டில் முதலாவது இடத்திலும் உள்ளது.
உலகில் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளுக்கு மிகவும் வசீகரமான முதலீட்டை பெறுவதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்தச் செலவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பும் இரட்டிப்பாகியுள்ளது.
குடியுரிமை காப்புரிமை தாக்கல் செய்வதில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதலீடு கடந்த 8 ஆண்டுகளில் 2014-15 இல் சுமார் ரூ 2900 கோடியிலிருந்து 2022-23-ல் ரூ 6002 கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஸ்வமிதா (கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்) திட்டத்தின் கீழ், 2,00,000+ கிராமப்புற பகுதிகளில் சர்வே அப் இந்தியா வெற்றிகரமாக ட்ரோன் கணக்கெடுப்பை நடத்தி, சொத்து அட்டைகளை விநியோகித்துள்ளது.
பள்ளிகளுக்கு புதுமையை எடுத்துச் செல்லுதல்: 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ’மனாக்’ திட்டம் நாடு முழுவதும் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து ஒரு மில்லியன் யோசனைகளைக் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது.
பெண் விஞ்ஞானிகளை மேம்படுத்துதல்: அறிவியல் துறையில்பாலின ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்ய, கிரண் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
WRITE A COMMENT