Published : 19 Dec 2022 04:38 PM Last Updated : 19 Dec 2022 04:38 PM
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி A04, A04e ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, அம்சங்கள்
சென்னை: மலிவான விலையில் மல்டி டாஸ்கிங் பணிகளை மேற்கொள்ள உதவும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் பயனர்களை டார்கெட் செய்து சாம்சங் நிறுவனம் கேலக்சி A04 மற்றும் A04e ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி A04 மற்றும் A04e ஸ்மார்ட்போன்கள்.
A04 மற்றும் A04e சிறப்பு அம்சங்கள்
6.5 இன்ச் ஹெச்.டி+ இன்ஃபினிட்டி - v டிஸ்ப்ளே
5,000mAh பேட்டரி
டைப் சி சார்ஜிங் போர்ட்
5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்
எல்டிஇ சப்போர்ட்
இரண்டு போன்களுக்கும் இடையிலான வேறுபாடுகள்
கேமரா, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விஷயத்தில் இரண்டு போன்களிலும் கொஞ்சம் வேறுபாடுகள் உள்ளது.
கேலக்சி A04 மாடலை பொறுத்தவரையில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட கேமரா பின்பக்கம் இடம் பெற்றுள்ளது.
A04e மாடலை பொறுத்தவரையில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட கேமரா இடம் பெற்றுள்ளது.
கேலக்சி A04 போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதன் விலை முறையே ரூ.11,999 மற்றும் ரூ. 12,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும்.
கேலக்சி A04e போன் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதன் விலை முறையே ரூ.9,299, ரூ.9,999 மற்றும் ரூ. 11,499 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT