Published : 18 Nov 2016 11:12 AM
Last Updated : 18 Nov 2016 11:12 AM
கேட்ஜெட் என்றவுடன் ஸ்மார்ட் போன்களும், புளுடூத் சாதனங்களும்தான் நினைவுக்கு வரும். பால்பாயிண்ட் பேனா நினைவுக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பால்பாயிண்ட் பேனா ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ‘பியாண்ட் இங்க்’ எனும் இந்தப் புதிய பேனா நன்றாக எழுதுவதைத் தவிர வேறு சில முக்கிய டிஜிட்டல் பயன்பாடுகளையும் கொண்டிருக்கிறது.
இது சிறிய பேட்டரி, யு.எஸ்.பி டிரைவ் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 5 மணி நேர சார்ஜ்தான் கொண்டது என்றாலும் அவசரத்திற்கு போனை சார்ஜ் செய்யப் பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புகளைக் கொண்டு செல்ல யு.எஸ்.பி டிரைவை, பயன்படுத்தலாம். இதில் காகிதத்தில் எழுதுவது தவிர, இதன் முனையைத் தொடுதிரைக்கான ஸ்டைலஸ் ஸ்டிக் ஆகவும் பயன்படுத்தலாமாம். அந்த வகையில் ஸ்மார்ட் பேனா என வைத்துக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: >http://www.beyondinkpen.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT