Published : 15 Sep 2022 06:15 PM
Last Updated : 15 Sep 2022 06:15 PM

அறிமுகமானது விவோ V25 ஸ்மார்ட்போன் | நிறம் மாறும் பேக் பேனல் உட்பட ஏராளமான அம்சங்கள் & விலை

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ V25 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனின் பின்பக்க பேனல் தானாகவே நிறம் மாறும் தன்மையை கொண்டுள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது V25 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ.

V25 புரோ மாடல் ஸ்மார்ட்போனில் சில மாற்றங்களை செய்து V25 போன் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனும் தரமான கேமரா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. புரோ மாடலை காட்டிலும் இதன் விலை சற்று குறைவு எனத் தெரிகிறது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.44 இன்ச் திரை அளவு கொண்ட ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே.
  • மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC சிப்செட்.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
  • 5ஜி இணைப்பு வசதி.
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளை கொண்டுள்ளது.
  • 4500mAh திறன் கொண்ட பேட்டரி.
  • 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்.
  • டைப் சி சார்ஜிங் போர்ட்.
  • 8ஜிபி வேரியண்ட் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 12ஜிபி வேரியண்ட் ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x