Published : 27 Oct 2016 05:24 PM
Last Updated : 27 Oct 2016 05:24 PM
கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளைப் படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ‘ஸ்டோரிவார்ஸ்’ இணையதளத்தைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தத் தளம் இரண்டுக்குமே உதவி செய்கிறது.
அடிப்படையில் இந்தத் தளம் கூட்டு முயற்சியில் கதை எழுதுவதற்கானது. அதாவது மற்றவர்களுடன் இணைந்து கதை எழுத இந்தத் தளம் உதவுகிறது. இரண்டுவிதமாக இதைச் செய்யலாம். ஒன்று உங்கள் மனதில் உள்ள கதையை ஆரம்பித்து வைத்து மற்றவர்கள் அதை எப்படித் தொடர்கின்றனர் என்று பார்க்கலாம். அல்லது மற்றவர்கள் தொடங்கி வைத்துள்ள கதையின் அடுத்த அத்தியாயத்தை நீங்கள் எழுதலாம். எது சிறந்தது என்பதை சக வாசகர்கள் வாக்குகள் மூலம் தீர்மானிப்பார்கள்.
முகப்புப் பக்கத்திலேயே கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் விரும்பியதைத் தேர்வு செய்து வாசிக்கலாம். அதன் பிறகு, கதையை நீங்கள் தொடர விரும்பினால் அடுத்த பகுதியை எழுதிச் சமர்ப்பிக்கலாம்.
இப்படி மற்றவர்கள் சமர்பித்த பகுதிகளை வாசித்து எந்தப் பகுதி சிறப்பாக இருக்கிறது என வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் பகுதி தேர்வு செய்யப்படும். பல்வேறு வகைகளிலிருந்து கதைகளைத் தேர்வு செய்யலாம்.
இதே முறையில் புதிய கதையைச் சமர்ப்பிக்கலாம். இந்தக் கதைகள் இலக்கியத் தரத்தைப் பெற்றிருக்கும் என்று சொல்வதற்கில்லை: ஆனால் உங்கள் மனதில் உள்ள எழுத்து ஆர்வத்துக்கும் வாசிப்பு ஆர்வத்துக்கும் தூண்டுதலாக இருக்கும். கதைகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன.
இணையதள முகவரி: >https://www.storywars.net/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT