Published : 30 Sep 2016 11:09 AM
Last Updated : 30 Sep 2016 11:09 AM
கூகுளின் ஒளிப்படம் மற்றும் வீடியோ சேமிப்புக்கான ‘கூகுள் போட்டோஸ்’ செயலியில் புதிய வசதிகள் அறிமுகமாகியுள்ளன. முதல் வசதி, ஒளிப்படங்களை எளிதாகப் பகிர்ந்துகொள்வதற்கானது. புதிதாக எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், அந்தப் படங்களின் மீது தட்டினால் போதும், பகிர்ந்து கொள்வதற்கான வசதி தோன்றும். அவற்றிலிருந்து யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைத் தேர்வு செய்தால் போதும். நண்பர்கள் கூகுள் போட்டோஸ் சேவையைப் பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிய படத்திற்கான அறிவிப்பு வரும். மற்றவர்களுக்குக் குறுஞ்செய்தி அல்லது இமெயில் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
இரண்டாவது வசதி, பயனாளிகள் ஒளிப்படங்களை ஒன்றாகத் தைத்து திரைப்படமாக உருவாக்கித்தருகிறது. புதிதாக எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமல்லாமல், பயனாளிகள் கோப்பில் உள்ள பொருத்தமான படங்களைத் தானாகத் தேர்வு செய்து அவற்றை எல்லாம் ஒன்றாக இணைத்துத் திரைப்படமாக்கித் தருகிறது.
மேலும் விவரங்களுக்கு: >http://bit.ly/1dAy8hq
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT