Published : 09 May 2016 11:43 AM
Last Updated : 09 May 2016 11:43 AM

பட்டன் இல்லாத போன்

ஸ்மார்ட்போன்களில் இனிமேல் புதிய புதிய வசதிகள்தான் இருந்தால்தான் விற்பனையாகும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. எல்ஜி நிறுவனம் தனது முயற்சியாக கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. போனை ஆன் செய்வதற்குகூட பட்டன் கிடையாது. போனின் கீழ்பகுதியில் ஒரு ஸ்கேனர் உள்ளது. இதில் கைரேகையை காட்டினால் போன் ஆன் ஆகும். இந்த விஷயத்தில் ஆப்பிள் நிறுவனத்தை முந்திக் கொண்டுள்ளது எல்ஜி.

ஹோவர்போடு பிளைட்

ட்ரோன் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரம் பரவலாக புழக்கத்தில் வந்துவிட்டது. ஆட்கள் செல்ல முடியாத இடங்கள், கூட்டங்களுக்கு மேலே பறந்து படம் பிடிக்க பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பொருட்களை டெலிவரி செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதே போன்ற சிறிய அளவிலான ஹோவர்போர்டில் பறந்துள்ளார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெட்ஸ்கீ வீரர் பிரான்கி சபாட்டா. இதன் மூலம் தனிநபர்கள் வானத்தில் பறப்பதற்கான காலம் விரைவில் உருவாகலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x