Published : 13 Apr 2022 02:11 PM
Last Updated : 13 Apr 2022 02:11 PM
கலிபோர்னியா: உலகளவில் யூடியூப் தளத்தின் சேவை சில மணிநேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை யூடியூப் தளத்தின் பயனர்கள் செவ்வாய்க்கிழமை இரவு எதிர்கொண்டுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். கடந்த 2021-இல் கிடைத்த தகவலின்படி உலகளவில் சுமார் 2.21 பில்லியன் கணக்கிலான மக்கள் இந்த சேவையைப் பெற்று வருகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்கலாம்.
இத்தகைய சூழலில் செவ்வாய் (12/04/22) அன்று இரவு உலக அளவில் யூடியூப் தளத்தின் குறிப்பிட்ட சில அம்சங்களை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்தனர். இந்த சிக்கல் சில மணிநேரம் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து யூடியூப் நிறுவனமும் ட்வீட் செய்திருந்தது. அதில் கணக்குகளை மாற்றும்போதும், லாக்-இன் செய்யும்போதும், நேவிகேஷன் பாரை பயன்படுத்தும்போதும் சிக்கல் இருப்பதாக உலகளவில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் அறிவோம். சிக்கலை தீர்ப்பதற்கான வழிகளை மேற்கொண்டுள்ளோம் என முதல் ட்வீட்டில் சொல்லியிருந்தது.
தொடர்ந்து அனைத்து சிக்கலுக்கும் தீர்வு காணப்பட்டது என யூடியூப் தனது ட்வீட் மூலமாக தெரிவித்தது. சுமார் 3 மணிநேரம் வரை இந்தச் சிக்கல் நீடித்ததாக தெரிகிறது.
All fixed – you should now be able to log in, switch between accounts, and use the account menu & navigation bar across all services (YouTube, YouTube TV, YouTube Music, YouTube Studio) and devices.
Thank you so much for your patience
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT