Published : 06 Apr 2022 12:59 PM
Last Updated : 06 Apr 2022 12:59 PM
இந்தியச் சந்தையில் இன்று விற்பனையை தொடங்கியுள்ளது ரியல்மி நிறுவனத்தின் C31 (realme c31) ஸ்மார்ட்போன். இந்த போனுக்கு அறிமுகச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பட்ஜெட் விலை போனாக C31 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்போனை மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சாட், தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள மற்றும் பிரவுசிங் செய்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன் இது. குறைவான கிராபிக்ஸ் செயல்பாடு கொண்டுள்ள இந்த போனில் கேம் விளையாடுவது சற்று கடினம்.
கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகமான C21 போனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் அப்டேட் வெர்ஷனாக C31 அறிமுகம் செய்யப்பட்டது.
The #realmeC31 features a Side-mounted Fingerprint for Fast Unlock, making your life easier & effortless!#NayeZamaneKaEntertainment
— realme (@realmeIndia) April 5, 2022
Starting at ₹8,999/-
First Sale at 12 PM, Tomorrow, on https://t.co/HrgDJTHBFX & @Flipkart
Know more: https://t.co/qIeQYtjk6d pic.twitter.com/X2ZAsMfohT
சிறப்பம்சங்கள் மற்றும் விலை
6.5 இன்ச் ஹெச்.டி+எல்.சி.டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் யூனிசாக் டி612 புராசஸர், 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது இந்த போன். ஆண்ட்ராய்டு 11-இல் இயங்கும் இந்த போனின் பின்பக்கத்தில் மூன்று கேமரா உள்ளன. அதில் பிரதான கேமரா 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரி, 4ஜி இணைப்பு வசதியும் இதில் உள்ளது.
இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 3ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.8,999. 4ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.9,999. ஆன்லைனில் இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT