Last Updated : 04 Mar, 2016 11:41 AM

 

Published : 04 Mar 2016 11:41 AM
Last Updated : 04 Mar 2016 11:41 AM

வீடியோ புதிது: காபி ரகசியம்

பூமியில் கச்சா எண்ணெய்க்குப் பிறகு அதிகம் பரிவர்த்தனை செய்யப்படும் பண்டமாக காபி இருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். காபி களைப்பைப் போக்கி, புத்துணர்ச்சி தருவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் விரும்பிப் பருகப்படுகிறது.

எல்லாம் சரி, காபிக்கு இந்தத் தன்மை எப்படி வருகிறது? இந்தக் கேள்விக்கான விடையை மிட்சல் மோபிட் என்பவர் உருவாக்கியுள்ள ‘காபி ஆன் யுவர் பிரைன்’ வீடியோ விளக்குகிறது. நாம் விழித்திருக்கும் போது நமது மூளையில் அடினோசனை எனும் வேதிப்பொருள் உண்டாகி, மெல்லச் சேர்ந்து, மூளையின் செயல்களை மந்தமாக்கும் ‘ரிசெப்டார்’களுடன் இணைந்துகொள்கிறது. எவ்வளவு அதிகம் விழித்திருக்கிறோமோ அந்த அளவு இந்த வேதிப்பொருள் அதிகமாகும். நாம் தூக்கமின்மையை உணர்வது இப்படித்தான்.

காபியில் உள்ள அமைப்பு இந்த வேதிப்பொருளுக்கு இணையாக உள்ளது. எனவேதான் இந்த வேதிப்பொருளுடன் போட்டியிட்டு அதைச் செயலிழக்க வைக்கிறது. காபி ரகசியம் பற்றி மேலும் அறிய