Last Updated : 18 Mar, 2016 11:56 AM

 

Published : 18 Mar 2016 11:56 AM
Last Updated : 18 Mar 2016 11:56 AM

வீடியோ புதிது: புளூட்டோனியம் அறிவோம்

புளூட்டோனியம்தான் உலகின் ஆபத்தான தனிமம் என்று கருதப்படுவது உங்களுக்குத் தெரியுமா? மற்ற தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டவை என்றால், புளூட்டோனியம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. கதிரியக்கச் செயல்பாட்டால் கண்டறியப்பட்டது என்பதால் அது ஆபத்தானது. இதுவும் கதிரியக்கத் தன்மை கொண்டது.

புளூட்டோனியத்தைச் சாதாரண ஆய்வுக்கூடத்தில் வைத்திருக்க முடியாது. அதற்கென வடிவமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில்தான் வைக்க முடியும். புளூட்டோனியத்தை நேரில் பார்ப்பது சாத்தியமல்ல. புளூட்டோனியம் பற்றி இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை வழங்குகிறது ரியல் புளூட்டோனியம் வீடியோ.

ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஆவணப்பட பாணியில் அமைந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்துப் பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். புளூட்டோனியம் பற்றி மட்டும் அல்ல, ‘பீரியாடிக் டேபிள்’ எனப்படும் தனிம‌ அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமம் பற்றிய வீடியோக்களையும் இதன் பின்னே உள்ள யூடியூப் சேனலில் பார்க்கலம்.

வீடியோவைக் காண: