Last Updated : 04 Dec, 2015 04:04 PM

 

Published : 04 Dec 2015 04:04 PM
Last Updated : 04 Dec 2015 04:04 PM

அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டும் தளம்

ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரியா அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் நேசக்கரம் நீட்டுவதற்காக இணையம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களால் இயன்ற சிறிய உதவிகளை அளிக்க தொழில்நுட்ப ஆர்வலர்கள் முயன்று வருகின்றனர்.

இந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்பாட்.ஆர்க் ( >>http://expatt.org/en/) எனும் இணையதளம் அகதிகளுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர முயல்கிறது.

இந்தத் தளத்தின் மூலம் அகதிகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் திறன்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அகதிகளைப் பணிக்கு அமர்த்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் இவர்களில் பொருத்தமானவர்களைத் தேர்வு செய்து வாய்ப்பு அளிக்கலாம்.

தாய்நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைபவர்களுக்கு அடைக்கலம் கிடைப்பது முதல் பிரச்சனை என்றால், அதன் பிறகு வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வது பெரும் பிரச்சனையாக அமையலாம். அடைக்கலம் தரும் நாடுகளுக்கும் இது சவால் தான்.

இந்த இரண்டையுமே குறைக்கும் வகையில் கடினமாக உழைக்கத்தயாராக உள்ள அகதிகளையும், நிறுவனங்களையும் இணைத்து வைக்கும் இந்தத் தளத்தை நல் இதயம் கொண்ட ஆர்வலர்கள் உருவாக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x