Published : 06 Nov 2015 12:23 PM
Last Updated : 06 Nov 2015 12:23 PM
இணையத்தின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா தனது 14வது ஆண்டில் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. அதன் ஆங்கில வடிவத்தில் 50 லட்சம் கட்டுரைகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேஸ் லைபர் எனும் விக்கி தொண்டர் எழுதியுள்ள பெர்சூனியா டெர்மினாலிஸ் எனும் அரிய வகை செடி பற்றிய கட்டுரைதான் இந்த மைல் ல் கட்டுரையாக அமைந்துள்ளது. நிச்சயம் விக்கி ஆர்வலர்கள் பெருமைப்படக்கூடிய செய்திதான்.
ஆனால் விக்கிபீடியா இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகம் இருப்பதாக இந்தச் செய்தி பற்றிய விக்கிமீடியா (விக்கிபீடியாவை நிர்வகிக்கும் அமைப்பு) தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. ஏனெனில் தற்போதுள்ள 50 லட்சம் கட்டுரைகளில் எல்லாமே தரமானவை மற்றும் தகவல்பூர்வமானவை என்று சொல்லிவிட முடியாது. இன்னமும் திருத்தங்கள் செய்து மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் விக்கி தொண்டர்கள் இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் கட்டுரைகளை மெருக்கேற்ற வேண்டும் என்பதுதான்!
மைல்கல் கட்டுரையை வாசிக்க: >https://en.wikipedia.org/wiki/Persoonia_terminalis
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT