Published : 26 Oct 2015 12:11 PM
Last Updated : 26 Oct 2015 12:11 PM
செல்போனுக்கு மிக வேகமாக சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் சார்ஜரை வடிவமைத்துள்ளது யுஎஸ்பிடிஐ என்கிற நிறுவனம். வழக்கமான சார்ஜர் போல இல்லாமல் மிகக் குறைவான நேரத்தில், இரண்டு மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏற்றுகிறது. இந்த சார்ஜரின் முனையில் மின்சக்தியை சேமித்து வைக்கும் வசதி இருப்பதால் இந்த சார்ஜரையே சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
வழக்கமாக, செல்போனில் சார்ஜ் ஏற்றும்போது பேட்டரி சார்ஜிங் அளவை செல்போனை எடுத்து பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த சார்ஜரில் அதைத் தெரிந்துகொள்ள எல்இடி இண்டிகேட்டர் உள்ளது. சார்ஜிங் அளவுக்கேற்ப வண்ணங்கள் ஒளிரும். மிக விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.
மடக்கும் எலெக்ட்ரிக் பைக்
எலெக்ட்ரிக் பைக் வடிவமைப்பில் உலக அளவில் பல நிறுவனங்களும் பல விதமான முயற்சிகளில் உள்ளன. அந்த வகையில் ஒரே நிமிடத்தில் மடக்கும் வகையிலான எலெக்ட்ரிக் பைக்கை ‘ஜி ப்ளைபைக்’ என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 40 கிலோ மீட்டர் வரை செல்லும். ஜிபிஎஸ் வசதிக்காக ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சக்கரங்கள் பஞ்சர் ஆகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி பூட்டு, ரிமோட் மூலம் இயக்கும் வசதி போன்றவையும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT