Last Updated : 24 Jun, 2020 08:32 PM

 

Published : 24 Jun 2020 08:32 PM
Last Updated : 24 Jun 2020 08:32 PM

பயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்

வணிகத்துக்காக ட்விட்டரைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சிலவற்றில் தனிப்பட்ட தகவல்கள் திருடு போனதற்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

ட்விட்டருக்கு விளம்பரம் தருபவர்கள் மற்றும் வணிகத்துக்காக ட்விட்டரைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ட்விட்டர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் பாதுகாப்புக் குறைபாட்டால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனக் கணக்குகளின் பயனர்களது மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், அவர்கள் கிரெடிட் கார்ட் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் ஆகியவை இந்தத் தனிப்பட்ட தகவல்களில் அடங்கும்.

ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவல் திருட்டு குறித்து உறுதி செய்துள்ளார்.

"ads.twitter.com அல்லது analytics.twitter.com என்ற முகவரியில் உங்களது ரசீது விவரங்களைப் பார்க்கும்போது, அந்தத் தகவல்கள் பிரவுசரின் கேச்சில் சேமிக்கப்படுகிறது. இது நடக்கிறது என்று தெரிந்தவுடன் நாங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துள்ளோம். மேலும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைத்த அத்தனை பயனர்களுக்கும் இதுபற்றித் தெரிவித்து, அவர்கள் எப்படித் தங்கள் தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளோம். கேச்சில் சேமிக்கப்பட்ட தகவல் குறித்து தெரியாமல் போனது கவனக்குறைவுதான்" என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் பயனர் தகவல் திருட்டு நடப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் பல பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடு போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் போன வருட மே மாதம், ஆப்பிள் மொபைல்களில் ட்விட்டர் செயலி பயன்படுத்துபவர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த பிப்ரவரியில் ஆண்ட்ராய்ட் பயனர்களின் ட்விட்டர் செயலியில் கோளாறு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x