Published : 16 Jun 2020 03:09 PM
Last Updated : 16 Jun 2020 03:09 PM
வாட்ஸ் அப் செயலியில் டிஜிட்டல் பேமண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஃபேஸ்புக்கின் சொந்த நிறுவனமான வாட்ஸ் அப், கடந்த 2019 நவம்பர் மாதம், வாட்ஸ் அப் பிஸினஸ் என்ற செயலியை பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்தது. வியாபாரம் செய்பவர்கள் தங்கள் பொருட்களைப் பற்றிய விலை, அமைப்பு உள்ளிட்ட விவரங்களை இதில் சேர்க்கலாம்.
தற்போது பணம் செலுத்துவதற்கான வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பே செயலியைப் போல தனிப்பட்ட நபர்களுக்குள்ளாகவோ, அல்லது வாட்ஸ் அப் செயலியுடன் இணைந்திருக்கும் வியாபாரச் சேவைகளுக்கோ பணத்தை அனுப்பலாம். இது உள்ளூர் சிறு வியாபாரிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேமெண்ட் வசதியை ஃபேஸ்புக்கின் அனைத்துச் செயலிகளிலும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இப்போதைக்கு இந்தச் செயலியில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பேமெண்டுக்காகப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட பயனர்களுக்கு இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், வியாபாரிகள் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைக்குப் பணம் கட்டுவதைப் போல ஒரு கட்டணத்தை இதற்கும் செலுத்த வேண்டியிருக்கும்.
- ஜான் சேவியர் (தி இந்து (ஆங்கிலம்))
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT