Published : 04 Mar 2020 03:18 PM
Last Updated : 04 Mar 2020 03:18 PM

குறைந்த விலையில் அதிக அம்சங்கள்: விரைவில் வெளியாகிறது இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ

மக்கள் மத்தியில் அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பல மொபைல் நிறுவனங்கள் நீ, நான் என்று போட்டிபோட்டு பல ஸ்மார்ட் போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் ரெட்மி, ஓப்போ போன்ற நிறுவனங்களுக்கு இணையாக சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வெளியிட்டது.

அந்த வரிசையில் வரும் மார்ச் 6-ம் தேதி இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகும் என அந்நிறுவனம் ட்விட்டரில் விடியோ வெளியிட்டுள்ளது. இதுவே இன்பினிக்ஸின் முதல் பாப் அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 6-ம் தேதி பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்லது.

இந்த மொபைல் போன் 4GB RAM + 64GB சேமிப்பு அளவுடன் ரூ.9,999 பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மட்டும் இல்லாமல் இதற்க்கு முன்னதாக வந்த இன்பினிக்ஸ் மொபைல் போன்கள் அனைத்துமே மலிவு விலையில் அனைவரும் வாங்கும் விலையில் கிடைக்கின்றன.

இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோவின் சிறப்பம்சங்கள்:

ஓஎஸ்:

ஆண்ட்ராய்டு 10

ப்ராஸசர்:

மிடியா டெக் ஹிலியொ பி22

டிஸ்பிளே:

6.53 இன்ச் முழு எச்டி டிஸ்பிளே

கேமரா:

பின்புறம்:

48 மெகா பிக்சல் முதன்மை கேமரா. இதைத் தவிர 5 மெகா பிக்சல் கேமரா, 2 மெகா பிக்சல் கேமரா என மூன்று பின்புறக் கேமாரக்கள் உண்டு.

முன்புறம்: 16 மெகா பிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா

பேட்டரி:

4000mah லியான் பேட்டரி

வண்ணங்கள்:

நீல நிறம் மற்றும் பச்சை நிறம்

இதே அம்சங்களில் மற்ற நிறுவனங்கள் அதிக விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், இன்ஃபினிக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் அதிக அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. இதன் தரம் எவ்வாறு இருக்கிறது என்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்தவுடன்தான் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x