Published : 26 Feb 2020 01:36 PM
Last Updated : 26 Feb 2020 01:36 PM
6000 எம்ஏஎச் பேட்டரி, 64 மெகா பிக்சல் கேமராவுடன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 மொபைல் நேற்று வெளியானது.
சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸில் எம்30, எம்30எஸ் என்ற மாடல்களை வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எம்31 மொபைல் பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மொபைலை 'மெகா மான்ஸ்டர்' என்று சாம்சங் தனது அதிகாரபூர்வமான இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது. பிப். 25-ம் தேதி (நேற்று) மதியம் 1 மணியளவில் சாம்சங் ஸ்டோரில் கேலக்ஸி எம்31 வெளியானது.
இதற்கு முன்னால் வெளியான எம் சீரிஸில் கேலக்ஸி எம் 30 ஸ்மார்ட்போன் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு ரூ.9,649-க்கும், சாம்சங் கேலக்ஸி எம் 30 S ஸ்மார்ட்போன் 4 GB RAM + 64GB சேமிப்பு அளவின் விலை ரூ.12,999-க்கும் விற்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன் 6 GB RAM + 64 GB சேமிப்பு அளவின் விலை ரூ.15,999 , 6 GB RAM + 128 GB சேமிப்பு அளவின் விலை ரூ.16,999 ஆகவும் விற்கப்படும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்31 -யின் சிறப்பம்சங்கள்:
ஓஎஸ்:
ஆண்ட்ராய்டு 10
ப்ராஸசர்:
ஆக்டக்கோர்
டிஸ்பிளே:
* 6.4 இன்ச் ஃபுல் எச்டி திரை
* அமோல்ட் திரை (AMOLED Display)
பேட்டரி:
* 6000mah
* 15W ஃபாஸ்ட் சார்ஜர்
கேமரா:
* பின்புற கேமராக்கள் - முதன்மை கேமரா 64 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல் வைடு ஆங்கிள், 5 மெகா பிக்சல் டெப்த் கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் (Macro) என நான்கு கேமராக்கள் உள்ளன.
* முன்புற கேமரா - 32 மெகா பிக்சல்
இந்த சாம்சங் கேலக்ஸி எம் 31 மொபைல் போன் வழக்கம் போல் ஃப்ளாஷ் விற்பனையாக சாம்சங் ஸ்டோர் இணையதளத்திலும் மற்றும் அமேசானிலும் வரும் மார்ச் 5-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகின்றது.
ரெட்மி, ரியல்மீ, ஓப்போ, விவோ போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக குறைந்த விலையில் அதிக அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT