Published : 15 May 2014 03:46 PM
Last Updated : 15 May 2014 03:46 PM

அழியும் கருவிகள்

முன்பெல்லாம் வீடுகளின் சுவற்றில் கடிகாரமும், முற்றத்துக்கு பக்கத்து அறையில் டேப் ரிக்கார்டரும், ஹாலில் தொலைக்காட்சி பெட்டிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் இப்போது அந்த சேவைகள் அனைத்தையும் ஸ்மார்ட்போன் என்னும் ஒற்றைக் கருவியே தர ஆரம்பித்துவிட்டது. இதனால் ஏற்கெனவே உபயோகத்தில் இருந்த, 6 தற்கால எலக்ட்ரானிக் சாதனங்கள் இப்போது அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டன. பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அப்படி அழிந்துவரும் சாதனங்களில் முதல் இடத்தில் இருப்பது டிஜிட்டல் கேமராக்கள். இதைத்தொடர்ந்து எம்பி 3 மற்றும் டிவிடி பிளேயர்கள், கை மற்றும் சுவர் கடிகாரங்கள், வாய்ஸ் ரிக்கார்டர்கள் ஆகியவையும் இந்த அழிந்துவரும் கருவிகள் பட்டியலில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x