Published : 03 Jul 2015 04:11 PM
Last Updated : 03 Jul 2015 04:11 PM
இணையத்தில் இலக்கண சாலையில் செல்ல விருப்பமா? ரோட் டூ கிராமர் இணையதளம் இதற்காக என்றே இருக்கிறது. ஆம் இந்த இணையதளம் இலக்கணப் பயணத்தை மேற்கொள்ள வைத்து ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.
ஆங்கில இலக்கண அம்சங்களைக் கற்றுக்கொள்ள உதவும் விஷயங்களைப் பாடமாகத் தராமல் சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் விளையாட்டுக்கள் மற்றும் வினாடிவினா வடிவில் அளிக்கிறது இந்தத் தளம்.
வினாடி வினா பகுதியில் கிளிக் செய்து, பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் போன்ற தலைப்பைத் தேர்வு செய்து அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்து ஆங்கில அறிவைச் சோதித்துக்கொள்ள்லாம். மாணவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி: >http://www.roadtogrammar.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT