Published : 29 Jun 2015 10:43 AM
Last Updated : 29 Jun 2015 10:43 AM
மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதும், தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கமும் உலகத்தில் பலகோடி நபர்களுக்கு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இப்பிரச்சினை உள்ளது.
இந்த உடல்நலக் குறைபாட்டுக்கு தற்காலிக தீர்வாக வந்துள்ளது ஏரிங் சி கேப் என்கிற சிறிய கருவி. தூங்கும்போது சுவாசத்தை சீராக வைக்க உதவுகிறது.
மூக்கின் இரண்டு நாசித் துவாரங்களிலும் பொருந்தும் விதமாக உள்ள இந்த கருவியிலுள்ள பேட்டரிகள் மூச்சு சீராக செல்வதற்கு ஏற்ற அழுத்தத்தைக் கொடுக்கின்றன.
மேலும் நாசியில் மூச்சு செல்வதற்கும், வெளியேறுவதற்கும் இடையூறு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை மூக்கில் பொருத்திக் கொண்ட பிறகு திரும்பவும் கழற்றி வைத்து பயன்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் பேட்டரிகள் எட்டு மணி நேரம் மட்டுமே இயங்கும் என்பதால், ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
முதலில் இந்த கருவியை வெளியிட்ட பிறகு, அடுத்த முயற்சியாக பேட்டரிகளை சார்ஜ் ஏற்றி பயன்படுத்த ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த நிறுவனம். விரைவில் இந்த கருவி விற்பனைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT