Published : 08 May 2015 02:52 PM
Last Updated : 08 May 2015 02:52 PM
கேட்ஜெட் உலகில் வெகு வேகமாகப் புதுப்புது சாதனங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. ப்ளுடூத் ஸ்பீக்கரும், ஃபிட்னஸ் பேண்ட்களும் சில ஆண்டுகளுக்கு முன் இல்லாதவை என்றாலும் இப்போது சர்வ சதாரணமாக இருக்கின்றன. சார்ஜருக்கான பவர் பேக், பென் டிரைவ் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்த பல சாதனங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. இப்படிக் கால வெள்ளத்தில் காணாமல்போன கேசட் ரெக்கார்டர், கையடக்க கேம் சாதனம் மற்றும் வானொலிப் பெட்டி உள்ளிட்ட அந்தக் கால சாதனங்களின் வடிவில் யுஎஸ்பி மெமரி ஸ்டிக் சாதனங்களை வடிவமைத்துள்ளார் ருமேனியாவைச் சேர்ந்த டிஜிட்டல் கலைஞரான ஆண்ட்ரி லாகாட்சு (Andrei Lacatusu) .
தனது சிறுவயது நினைவுகளாக இருக்கும் சாதனங்களை இப்படி வடிவமைத்திருப்பதாகக் கூறியுள்ள ஆண்ட்ரி டிஜிட்டல் கலைப்பொருட்களுக்கான பிஹான்ஸ் இணையதளத்தில் இவற்றைப் பார்வைக்கு வைத்துள்ளார். இவற்றை மெமரீஸ் ஸ்டிக் எனக் குறிப்பிடுகிறார்.
கேசட் வடிவிலும், வானொலி வடிவிலும் யுபிஎஸ் சாதனத்தைப் பார்க்கும்போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது!
அந்தக் கால சாதன நினைவுகளுக்கு: >https://www.behance.net/gallery/23461625/Memories-Stick
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT