Published : 13 Apr 2015 12:24 PM
Last Updated : 13 Apr 2015 12:24 PM
ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உடலுக்கு குளிரூட்டக்கூடிய உடைகளை விற்பனை செய்து வருகிறது. உடையின் வெளிப்பகுதியில் இருக்கும் விசிறி போன்ற சிஸ்டம் ஏர்கூலராக செயல்படுகிறது. யூஎஸ்பி ஒயர் மூலம் இதற்கான சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.
லைப் ஸ்ட்ரா
தண்ணீரை சுத்தப்படுத்தி குடிக்க உதவுகிறது இந்த சிறிய உறிஞ்சு குழாய். நேரடியாக குடிக்க தரமற்ற தண்ணீரையும் இந்த குழாய் மூலம் உறிஞ்சி குடிக்கும்போது சுத்திகரிக்கபட்டு வாய்க்குள் செல்லும். சுமார் 1000 லிட்டர் தண்ணீர்வரை இதன் மூலம் குடிக்கலாம்.
டேப்லெட் ஸ்டேண்ட்
டேப்லெட்டை மிகச் சுலபமாக கையாள இந்த மினிமல் ஸ்டேண்ட் பயன்படுகிறது. பல்வேறு அளவுகளில் இருக்கும் டேப்லெட்டுகளுக்கு ஏற்ப இதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். இந்த ஸ்டேண்டில் எந்த கோணத்திலும் டேப்லெட்டை பொருத்திக் கொள்ள முடியும்.
சோலார் பவர் பைக்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சோலார் பைக்குகளை தயாரிக்க பல நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் புதிதாக வந்துள்ளது இந்த சோலார் பைக். பெட்ரோல் அல்லது மின்சார பேட்டரிகளால் இயங்கும் பைக்குகளுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.
வாகனத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேகரிக்கப்படும் சூரிய சக்தி, மின்சாரமாக பேட்டரில் சேமிக்கப்படுகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏறினால் 70 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம், 50 கிலோமீட்டர் வேகத்தில் இந்த வாகனம் செல்லும்.
ஸ்மார்ட் போன் கீ போர்டு
ஸ்மார்ட் போனை சிறிய வகை கணினியாக பயன்படுத்தக்கூடிய அளவுக்கு பல ஆப்ஸ்களும் வந்துவிட்டன. அந்த வகையில் ஸ்மார்ட் போனுக்கு ஸ்மார்ட்டான கீபோர்டை வடிவமைத்துள்ளது ஒரு நிறுவனம். இந்த கீ போர்டை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். வைய்-பைய் இணைப்பு மூலம் இது செயல்படும். இதற்கான ஆப்ஸை ஸ்மார்ட் போனில் ஏற்றிக் கொண்டால் கிட்டத்தட்ட கணினியில் வேலைபார்ப்பது போலவே ஸ்மார்ட் போனில் எல்லா வேலைகளையும் முடித்து விடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT