Published : 24 Mar 2015 11:08 AM
Last Updated : 24 Mar 2015 11:08 AM
ஆன்லைன் டிவி என்பது உலகம் முழுக்க மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. கூகுள் நிறுவனம் இதற்காக குரோம்பாக்ஸை அறிமுகப்படுத்தியபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
இந்நிலையில் ஃபாக்ஸ், சிபிஎஸ் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேசிவரும் ஆப்பிள் நிறுவனம் விரைவில் இன்டர்நெட் டிவியை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வரும் ஜூன் மாதத்தில் வெளியிடவுள்ளது.
நோயை குணமாக்கும் பாட்டு
முதுமை காரணமாக, சத்தமான ஓசைகளைக் கேட்கிறபோது, காதில் ஒருவித ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த பிரச்சினை டின்னிட்டஸ் எனப்படுகிறடு. இதை தீர்க்க டின்னிட்ராக்ஸ் என்ற இணைய அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மியூசிக் பிளேயர் மாதிரியான இந்த அப்ளிகேஷன் மூலம் பாடல்களை தேர்வு செய்து கேட்கலாம்.
அப்படி கேட்கப்படும் பாடல்களில் காதை பாதிக்கக்கூடிய அதிர்வலைகள் தானாகவே பிரித்தெடுக்கப்படும். அந்த அதிர்வலைகள் இல்லாத பாடல்களை தொடர்ந்து கேட் பதால், நாளடைவில் டின்னிட்டஸ் பிரச்சினை யும் குணமாகிவிடும் என்கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.
ஒளியால் இயங்கும் கணினி
தற்போதைய கணினிகளில் சிப்கள், மெட்டல் சர்க்யூட் போர்டுகள் வழியாக பாயும் மின்னணு சிக்னல்கள் மூலமாகவே கணினிகள் இயங்குகின்றன. மின்னணு சிக்னலுக்கு பதிலாக நுண்ணிய குழாய்கள் வழியே லேசர் ஒளியை செலுத்தி அதன் மூலம் கணினிகளை இயக்கலாம் என்று அமெரிக்காவின் புளோரிடா மாநில ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஃபைபர் ஆப்டிக்கல் தொழில்நுட்பமும் ஏறக்குறைய இதேபோன்றதுதான் என்றாலும், அதில் ஒளியை கடத்தும் குழாய்களை நினைத்த மாதிரி மடிக்க முடியாது.
ஜீன்களை கட்டுப்படுத்தும் கருவி
புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். இந்த சிகிச்சையின்போது, புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் வழங்கப்படும் மருந்தின் சக்தியை அங்கு இருக்கும் ஜீன்கள் செயலிழக்கச் செய்துவிடும். இதை தடுக்கும் வகையில் எம்ஆர்பி-1 என்னும் நானோ மருந்தை அமெரிக்காவின் எம்ஐடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருந்தை செலுத்தும் முன்பு, இந்த புதிய மருந்தை செலுத்தினால், சிகிச்சைக்கான மருந்தின் சக்தியை புற்றுநோய் ஜீன்களால் தடுக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT