Published : 13 Mar 2015 02:53 PM
Last Updated : 13 Mar 2015 02:53 PM
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சின் விலையும் விற்பனை தேதி பற்றிய விவரங்களும் வெளியாகிவிட்டன. ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக், பிரத்யேக நிகழ்ச்சியில் இது பற்றிய விவரங்களை வெளியிட்டார்.
ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் எடிஷன் ஆகிய மூன்று கலெக்ஷன்களில் ஸ்மார்ட் வாட்ச் விற்பனைக்கு வர இருக்கிறது. மொத்தம் 38 மாதிரிகளுக்கு மேல் இருக்கின்றன. விலை சுமார் ரூ. 22,000 முதல் ரூ. 6,26,000-க்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள்.
ஏப்ரல் 24 முதல் விற்பனைக்கு வருகிறது. ஏப்ரல் 10 -ம் தேதி முதல் பிரி ஆர்டர் செய்யலாம்.
இதன் பேட்டரி 18 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாம். ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஹோட்டல் அறையைத் திறக்கலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ,உபெர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான செயலிகள் இதில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் பல்வேறு ஸ்டிரேப்களையும் கொண்டிருக்கிறது. மேக்னட்டிக் சார்ஜர் மூலம் வாட்சை சார்ஜ் செய்யலாம். ஆப்பிள் வாட்ச் 50 மில்லி செகண்ட் அளவுக்குத் துல்லியமானதாம்.
வாட்சுக்குத் துணையாக ஐபோன் செயலியும் உண்டு. பிட்னஸ் மற்றும் ஆரோக்கிய நோக்கில் இதைப் பயன்படுத்தலாம். அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம். டிவிட்டர் இணைப்பும் உண்டு.
ஆப்பிள் வாட்ச் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறதா என்பது விற்பனைக்கு வந்த பிறகே தெரியும். ஆப்பிள் வாட்ச் விவரங்களுக்கு: >http://www.apple.com/watch/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT