Published : 05 Jan 2015 05:12 PM
Last Updated : 05 Jan 2015 05:12 PM
# அதிவேக பயணத்தின் அடுத்த கட்டமாக வருகிறது ஹைப்பர்லூப் பயணத் திட்டம் . கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிப்பதற்கு ஒப்பானது.
# இதை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அது என்ன ஹைப்பர்லூப் என்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீண்ட குழாய்க்குள் வழுக்கிக்கொண்டே பயணிப்பது போல என்று சொல்லலாம்.
# காந்த சக்தி மூலம் இயங்கும் இந்த ஹைப்பர்லூப் இயந்திரத்தில் அமர்ந்ததும் மேலே எழும்பி அப்படியே அசுரவேகத்தில் பயணிக்கும். காந்த அலைகள் மூலம் இயங்குவதால் பயணக் களைப்பே இருக்காது.
# 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய தூரத்தை அரை மணிநேரத்தில் அடைந்து விடலாம். இது 10 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
# அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் அல்லது லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்துக்கு முதல் கட்ட பயணத்துக்கான பணிகள் தொடங்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT