Published : 02 Jan 2015 04:29 PM
Last Updated : 02 Jan 2015 04:29 PM
ட்விட்டர் கணக்கை பயன்படுத்தாத போது பயனர்கள் தவற விட்ட முக்கிய ட்வீட்டுகளின் தொகுப்பை பார்க்குமாறு புதிய அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது ட்விட்டரில், நமது ட்வீட்டுகளோடு சேர்த்து, நாம் ஆன்லைனில் இருக்கும் போது நாம் பின் தொடர்பவர்கள் செய்த ட்வீட்டுகளை மட்டுமே படிக்க முடியும். பழைய ட்வீட்டுகளைப் படிக்க வேண்டுமானால் அந்தந்த பயனர்களின் பக்கத்திற்கு சென்று பார்க்கலாம், அல்லது நமது பக்கத்தில் அடுத்தடுத்த ட்வீட்டுகளை பார்த்துக் கொண்டே வரலாம். 'வைல் யு ஆர் அவே' (while you are away) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு முறைகளுமே அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால், பயனர்கள் ஆன்லைனில் இல்லாத சமயத்தில், அவர் பின் தொடர்பவர்கள் பகிர்ந்த முக்கியமான ட்வீட்டுகளின் தொகுப்பை, அடுத்த முறை அவர் ஆன்லைனில் வரும்போது ஒரு தொகுப்பாக வழங்கப்படும் வசதியை ட்விட்டர் வழங்கியுள்ளது.
சில முக்கியமான ட்வீட்டுகள் கவனிக்கப்படாமல் போவதால் இத்தகைய அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நாளில் 50 கோடிக்கும் அதிகமான ட்வீட்டுகள் ட்விட்டரில் பகிரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT