Published : 02 Jan 2015 03:34 PM
Last Updated : 02 Jan 2015 03:34 PM
2014-ம் ஆண்டில் ஸ்மார்ட் போன் சந்தை சுறுசுறுப்பாகவே இருந்தது. புதிய அறிமுகங்களுக்குக் குறைவில்லை. இதனால் போட்டியும் பலமாகவே இருந்தது. போன்களின் செயல்திறன் மற்றும் வசதிகளில் புதுமைகளுக்கும் குறைவில்லை. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் டிஸ்பிளே அளவு பெரிதானது. பேட்டரி செயல்திறன் அதிகரித்தது.
எல்லாம் சரி 2015-ல் ஸ்மார்ட் போன்களில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? பிரபல தொழில்நுட்பத் தளமான கிஸ்மடோ இந்த ஆண்டில் ஸ்மார்ட் போனில் எதிர்பார்க்கக் கூடிய அம்சங்கள் மற்றும் போக்குகளைப் பட்டியலிட்டுள்ளது.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் அம்சம் போன்களின் டிஸ்பிளே இன்னும் துல்லியமாகும் என்பதாகும். அதே போல ஒல்லி பட்டத்துடன் வரும் போன்களும் அதிகமாகும். 2014-ல் ஒப்போ, ஜியோனி மற்றும் விவோ சார்பாக ஒல்லியான போன்கள் அறிமுகமானது நினைவிருக்கலாம். இந்த ஆண்டு ஸ்மார்ட் போன்கள் இன்னும் ஒல்லியகாலாம் என்பது எதிர்பார்ப்பு.
அதே போல 2014-ம் ஆண்டை செல்ஃபி எனப்படும் சுயபட மோகம் பிடித்தாட்டிய ஆண்டு எனத் தயங்காமல் சொல்லலாம். செல்ஃபி மோகம் கூடத்தான் போகிறதே தவிர குறையப்போவதில்லை என்று குறிப்பிப்பட்டுள்ளது. ஆடியோ தரம் அதிகரிக்கும், வியரபில்ஸ் எனப்படும் அணி கணிணி சாதனங்களுடனான ஒருங்கிணைப்பு அதிகமாகும், பேட்டரி ஆயுள் மேலும் மேம்படும் என்றெல்லாம் இந்தப் பட்டியல் நீள்கிறது.
2015-ல் ஸ்மார்ட் போன் கணிப்பு பற்றி விரிவாக படிக்க:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT