Published : 31 Dec 2014 02:57 PM
Last Updated : 31 Dec 2014 02:57 PM
2014-ஆம் ஆண்டு வெற்றிகரமாய் முடிந்து 2015 தொடங்கப்போகிறது. இணையத் தேடல் உலகின் அரசனான கூகுளும் தனது வழக்கமான டூடுல் உடன் 2014-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டவையின் பட்டியலைத் தன் முகப்புப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அனிமேஷன் வடிவ டூடுலை அழுத்தினால் அந்த விவரம் கிடைக்கும்.
அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்
எல்லாவற்றிற்கும் இணையமே என்றாகிவிட்ட நிலையில், நம் ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் 2014ஆம் ஆண்டின் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் முதலாக வந்துள்ளது.
1. ஐ.ஆர்.சி.டி.சி. ரயில்வே இணையதளம்
2. ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம்
3. எஸ்.பி.ஐ. ஆன்லைன்
4. ஸ்னேப்டீல் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம்
5. பி.என்.ஆர். ஸ்டேட்டஸ்
அதிகம் டிரெண்டிங்கான தேடல்கள்
1. தேர்தல் 2014
2. ஃபிஃபா 2014
3. ஐ போன் 6
4. கேட் 2015 தேர்வு
5. நரேந்திர மோடி
அதிகம் தேடப்பட்ட நபர்கள்:
கனடாவில் பிறந்த பஞ்சாபி பெண்ணான சன்னி லியோன் அடிப்படையில் போர்னோகிராபி நடிகை. ’ராகினி எம்.எம்.எஸ் 2’ என்னும் இந்திப்படத்தின் மூலம் இந்தியாவில் பிரபலமாகிய இவர் வடகறி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்
1. சன்னி லியோன்
2. நரேந்திர மோடி
3. சல்மான் கான்
4. காத்ரினா கைஃப்
5. தீபிகா படுகோனே
அதிக டிரெண்டிங்கான படங்கள்:
1. ராகினி எம்.எம்.எஸ். 2
2. கிக்
3. ஜெய் ஹோ
4. ஹேப்பி நியூ இயர்
5. பேங் பேங்
அதிகம் தேடப்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள்:
ஐ-போன், நோக்கியா, சாம்சங் போன்றவைகளைத் தாண்டி இந்த வருடம் அதிகம்பேரால் தேடப்பட்டது, மோட்டோரோலாவின் மோட்டோ வகை ஸ்மார்ட் போன்கள். வசதி மற்றும் தேவைகளுக்கேற்ப மூன்று வெவ்வேறு விதங்களில் போன்களை அறிமுகப்படுத்தி இருந்தது மோட்டோரோலா.
1. மோட்டோ ஜி
2. ஐ போன் 6
3. சாம்சங் கேலக்ஸி
4. மோட்டோ ஈ
5.மோட்டோ எக்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT