Published : 07 Nov 2014 12:51 PM
Last Updated : 07 Nov 2014 12:51 PM
ஸ்மார்ட் போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில், ஸ்ட்ராட்டஜி அனல்டிக்ஸ் என்னும் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்படி, 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தியான ஸ்மார்ட் போன்களில் 84 சதவீதம் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. ஆனால் முந்தைய காலாண்டைவிட இது நூலிழை அதாவது 1 சதவீதம் குறைவு என்றாலும் ஆண்ட்ரய்டு முன்னிலை இடத்தில் நீடிக்கிறது.
இரண்டாவது இடத்தில், ஆப்பிளின் ஐஓஎஸ் (12 சதவீதம் ) இருக்கிறது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன்கள் 3 சதவீதத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது. பிளாக்பெரிக்கு ஒரு சதவீதம். ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் அதில் சாம்சங் ஸ்மார்ட் போனின் பங்கு 35 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைந்திருப்பது. சீன ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போட்டியே இதற்குக் காரணம்.
ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தினாலும் வளர்ச்சிக் கோட்டைப் பொறுத்தவரை அது உச்சத்தைத் தொட்டுவிட்டதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே ஆண்ட்ராய்டி சந்தைப் பங்கை இதற்கு மேல் அதிகரிக்க முடியாது, தக்கவைத்துக்கொண்டாலே பெரிய விஷயமாக இருக்கும் என்கின்றனர்.
இதேபோல , ஸ்மார்ட் போன் சந்தையில் லெனோவோ மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் லெனோவோ, மோட்டாரோலா மொபிலிட்டையை வாங்கியதை அடுத்து இந்தக் கூட்டணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் சந்தையில் சீனாவின் ஜியோமி மூன்றாவது இடத்துக்கு வந்த நிலையில் இந்தக் கூட்டு அந்நிறுவனத்தை 4-வது இடத்துக்குத் தள்ளியுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT