Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM
எஸ்.எம்.எஸ். மூலம் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியை டெக்ஸ்ட் வெப் நிறுவனம் அளித்து வருகிறது. போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் பெறக் கூடிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமானால் இணைய மையங்களுக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. ஸ்மார்ட் போன்கள், டேப்லட் போன்றவை உதவியுடன் நம் இருப்பிடத்தில் இருந்தே இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதுகூட தேவையில்லாமல், சாதாரண செல்போனில் இருந்தே எஸ்.எம்.எஸ். மூலமாக இன்டர்நெட் பயன்படுத்தும் சேவையை டெக்ஸ்ட் வெப் நிறுவனம் வழங்கி வருகிறது.
எல்லா இணைய சேவைகளும்..
51115 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது மூலம் இணைய சேவைகளை பெற முடியும். உதாரணமாக நகரத்தின் போக்குவரத்து வழித்தடங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் சென்னை நுங்கம்பாக்கம் முதல் வடபழநி வரை என்று ஆங்கிலத்தில் டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு அனுப்பினால், அதற்கு ஏற்ற பதில்கள் எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பப்படும்.
இன்றைய வெப்பநிலை, ரயில் பயணச்சீட்டின் பி.என்.ஆர் நிலவரம், நாளிதழ்கள், தேர்வு முடிவுகள் என இணையத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய அனைத்து தகவல்களையும் இதன் மூலம் பெறலாம். இதில் ஒரு சில தகவல்கள் மட்டும் தமிழிலும் வழங்கப்படுகிறது.
எஸ்எம்எஸ்-சில் மாதிரி வினாத்தாள்
இந்நிலையில், மாணவர்கள் போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் களை பெறும் வசதியையும் டெக்ஸ்ட் வெப் நிறுவனம் தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. இதுபற்றி டெக்ஸ்ட் வெப் நிறு வனத்தின் தலைவர் ஸ்ரீவித்யா ராமரத்னம் கூறியதாவது:
மாணவர்கள் தங்கள் செல்போனில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் மாதிரி வினாத்தாளில் இருந்து அவர்களுக்கு ஒரு வினா அனுப்பப்படும். அதற்கு சரியான பதில் கொடுத்தால் அடுத்த வினா அனுப்பப்படும். கிராமப்புறங்களில் பயிற்சி வகுப்பு களுக்கு செல்ல இயலாத வர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
லைக், கமென்ட் போடலாம்
இதுபோல ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களையும் எஸ்.எம்.எஸ். மூலமாகவே பயன்படுத்த லாம். முதல் முறை எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு ஃபேஸ்புக்கில் லைக், கமென்ட், போஸ்ட் எல்லாவற்றையும் எஸ்.எம்.எஸ். மூலமாகவே செய்யலாம்.
இந்த சேவை ஏர்டெல், ஐடியா, வோடபோன், டாடா ஆகிய நெட்வொர்க் கில் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்-க்கும் 50 பைசா கட்டணம். ஒரு நாளுக்கு ரூ.1 போன்ற சலுகைகளும் உள்ளன. இவ்வாறு வித்யா ராமரத்னம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT