Last Updated : 09 Oct, 2014 11:22 AM

 

Published : 09 Oct 2014 11:22 AM
Last Updated : 09 Oct 2014 11:22 AM

அரசு அலுவலகங்களில் ஜி மெயில், யாஹுவுக்கு தடா

ஜி மெயில், யாஹுவுக்கு தடா

அரசு அலுவலகங்களில் ஜிமெயில், யாஹு உள்ளிட்ட மின்னஞ்சல் சேவைகளுக்கு தடை போட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பதிலாக அரசே மின்னஞ்சல் சேவைகளை வழங்கவுள்ளது. இதற்கான பணிகளை தேசிய தகவல் மையம் செய்யவுள்ளது. இதற்காக 50 லட்சம் புதிய மின்னஞ்சல் கணக்குகள் உருவாக் கப்படுமாம்.இது நல்லது என்றாலும், ஏற்கெனவே செய்யப்பட்ட தகவல் பரிமாற் றங்களை புதிய கணக்கிற்கு மாற்றுவது எப்படியென புரியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள்.

விண்டோஸ் 10

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கடைசி இயங்குதளம் விண்டோஸ் 8 ஆகும். இதில் சில அப்டேஷன்களை செய்து விண்டோஸ் 8.1 இயங்குதளத்தையும் வெளியிட்டது. ஆனால் இது பழைய மாதிரி வரவேற்பை பெறவில்லை. பயனர் கள் மத்தியில் விண்டோஸ் 8 பெரும் விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்நிலையில் விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த படைப்பை மேம்படுத்தப்பட்ட முறையில் வெளியிட முடிவு செய்துள்ளது மைக்ரோசாப்ட். வரப்போகும் இயங்குதளத்துக்கு விண்டோஸ் 9 என்று பெயரிடாமல் ஒரே பாய்ச்சலில் விண்டோஸ் 10 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இயங்குதளம் விண்டோஸ் 7 செய்த மேஜிக்கை நிச்சயம் செய்யும் என்கிறது மைக்ரோசாப்ட்.

மாயமான ‘ஆப்பிள்’கள்

கேட்ஜட் உலகில், ஆப்பிள் நிறுவனத்தை டிரண்ட் செட்டர் என்று சொல்லலாம். எண்ணற்ற சாதனங்களை தந்த ஆப்பிள், தற்போது ஐஓஎஸ் 6 ஐ வெளியிட்டுள்ளது. இதை வெளியிட்டதோடு மட்டுமன்றி ஐஓஎஸ் 7-க்கான எதிர்பார்ப்ப்பையும் பரபரப்பையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

இப்படி பரபரப்பாக இயங்கிவரும் ஆப்பிளை கவனிக்கும் பலர் அந்நிறுவனத் தின் முக்கிய சாதனங்கள் சந்தையை விட்டு தாண்டியதை அறிந்திருக்க முடியாது.இதில் முதல் இடத்தில் இருப்பதாக ஐபாட் கிளாசிக்கை சொல்லலாம்.

இதற்கடுத்து அப்ர்ட்சர் ஐபோட்டோ, மேக் புக், ஐபாட் 3, ஐபோன் 5 , 32 ஜிபி ஐபோன் என பலத்த எதிர்பார்ப்புக்களை கிளப்பி வெளியான சாதனங்கள் இன்று சந்தையில் இல்லை.

கூகுள் சேவை

கூகுள் ட்ரைவ் வொர்க் அப்ளிகேஷனை கேள்விப்பட்டிருப்போம். இந்த அப்ளிகேஷன் மூலம் இணையத்தில் 30 ஜிபி அளவு டேட்டாக்களை மாதத்துக்கு 5 $ செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூகுள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி அளவுக்கடங்காத தகவல்களை எந்த வித கட்டணமுமின்றி கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் அது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x